ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை முழுமையான தடுப்பூசியாக அந்நாட்டு உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் 200 மில்லியன் டோசுக்கு அதிகமான அளவு ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில இந்தத் தடுப்பூசி இனி கோமிர்நேட்டி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதை செலுத்துவதற்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி தொடரும் என கூறபட்டுள்ளது. ஃபைசர் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 91 சதவிகிதம் வெற்றி கண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.