கொரோனா வைரஸ்

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை என்ன?

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை என்ன?

EllusamyKarthik

உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது புதிய வகை கொரோனா திரிபுவான ஒமைக்ரான். இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் மருத்துவர் சுரேஷ் குமார், ANI செய்தி நிறுவனத்திடம் பேசி உள்ளார். 

அதில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து விளக்கி உள்ளார் அவர். 

“எங்கள் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். அதில் 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நாங்கள் சிகிச்சை அளித்த நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. யாருக்குமே உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சப்போர்ட், ஸ்டீராய்டு, ரெம்டெசிவிர் மாதிரியான மருந்துகள் கொடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இதுவரை 422-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதியாகி உள்ளது.