கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் அருகே தனியார் பள்ளியில் தங்க வைக்க பட்டு உள்ள கொரோன தொற்று நோயாளிகள் சிலர் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அங்கு இடம் இல்லாததால் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நோயாளிகள் தங்க வைக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் சிலர் இரவு நேரத்தில் டம்ளர் மற்றும் பாத்திரங்களை வைத்து தாளமிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயாளிகள் இரவில் குத்தாட்டம் போட்டு அருகில் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.