கொரோனா வைரஸ்

டாடா மோட்டார்ஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு

டாடா மோட்டார்ஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு

jagadeesh

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அலுவல‌கப் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு தங்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. அந்தவகையில், தலைமை மற்றும் கிளை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை இன்று முதல் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Guenter Butschek கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதவிர, பணி நிமித்தம் காரணமாக தங்கள் நிறுவன ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை நிறுத்தியுள்ளதாகவும், உள்நாட்டில் சாலை மார்க்கமாகவோ ரயில் மூலமாகவோ பயணம் செய்ய முன்அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 32 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 13 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹரியானாவில் 14 பேரும் டெல்லியில் 7 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 6 பேருக்கும், ராஜஸ்தானில் நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.