கொரோனா வைரஸ்

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் சர்வதேச பயணிகளுக்கு அனுமதி - ஆஸ்திரேலியா அரசு

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் சர்வதேச பயணிகளுக்கு அனுமதி - ஆஸ்திரேலியா அரசு

நிவேதா ஜெகராஜா

இந்தியா உற்பத்தி செய்துள்ள கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆஸ்திரேலியா செல்லும் பயனிகளுக்கு, ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு தெரிவித்த தகவலில், “ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணம் செய்வோர் கோவாக்சின் (இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பு) மற்றும் பிபிஐபிபி-கார்வ் வி (சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்தின் தயாரிப்பு) தடுப்பூசிகள் போட்டிருந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்துக்கொண்டோராக ஏற்கப்படுகின்றனர். அந்த அங்கீகாரம் அவர்களுக்கு தரப்படுகிறது.

இதன்மூலம் சீனா மற்றும் இந்தியா, மற்றும் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு ஆஸ்திரேலியா வர நினைக்கும் பிற நாடுகளிலிருப்போருக்கு உரிய அனுமதி கிடைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.