சினிமா

ஐசியூ-வில் நடிகை விஜயலட்சுமி: பண உதவி கேட்கும் சகோதரி!

ஐசியூ-வில் நடிகை விஜயலட்சுமி: பண உதவி கேட்கும் சகோதரி!

webteam

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை விஜயலட்சுமிக்கு உதவ வேண்டும் என்று அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. தமிழில் ’பூந்தோட்டம்’ படத்தில் தேவயானி தங்கையாக நடித்தவர். ’பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்த இவர், ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் ’மீசைய முறுக்கு’ படத்தில் நடித்திருந்தார்.

பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமி, தற்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இவர் இங்கு அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இவரது அம்மாவும் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

தற்போது இவர்களின் மருத்துவச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து விஜயலட்சுமி சகோதரி உஷா தேவி கூறும்போது, “இருந்த பணத்தை அம்மாவின் சிகிச்சைக்கு செலவு செய்துவிட்டோம். இப்போது விஜயலட்சுமியையும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக, கன்னட சினிமா துறையினரிடம் பண உதவியை எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித் துள்ளார்.