சினிமா

சிசிடிவி கேமராக்களை உடைத்து விஜய் ரசிகர்கள் ரகளை 

சிசிடிவி கேமராக்களை உடைத்து விஜய் ரசிகர்கள் ரகளை 

webteam

கிருஷ்ணகிரியில் பிகில் சிறப்புக்காட்சியை வெளியிட தாமதமானதையடுத்து விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். 

கடந்த சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் பிகில் திரைப்படம் சிக்கியது. சில நாட்களுக்கு முன்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிகில் உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சி‌கள் திரையிட அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தார். அரசின் நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். 

நேற்று வரை சிறப்புக்காட்சிகளுக்கு சிக்கல் நிலவிய சூழலில், இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் இன்று திரையிடப்பட்டன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, ரவுண்டானா அருகே உள்ள தியேட்டரில் பிகில் சிறப்புக்காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் ரவுண்டான பகுதியில் உள்ள போலீசாரின் தடுப்புகளையும் சிசிடிவி கேமராக்களையும் உடைத்தனர். கற்களையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.