சினிமா

“சுஷாந்த் கணக்கிலிருந்து ரியாவிற்கு அதிக பணம் அனுப்பப்படவில்லை”- அமலாக்கத்துறை தகவல்

“சுஷாந்த் கணக்கிலிருந்து ரியாவிற்கு அதிக பணம் அனுப்பப்படவில்லை”- அமலாக்கத்துறை தகவல்

Veeramani

சுஷாந்த் வங்கிக் கணக்கிலிருந்து ரியாவின் கணக்கிற்கு அதிக பணம் அனுப்பப்படவில்லை என்று அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. ஆனால் ரியாவின் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் பொருந்தாததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ரியாவின் வருமானம் மற்றும் முதலீடுகள் பற்றிய பதிவுகளை சமர்ப்பிக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளது.

ரியாவை 18 மணி நேரம் விசாரித்த பின்னர, கடந்த ஒரு வருடமாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கணக்குகளில் இருந்து நடிகை ரியா மற்றும் அவரின் குடும்பத்தினரின் கணக்குகளுக்கு பெரிய அளவில் பணம் அனுப்பப்படவில்லை என கண்டறிந்துள்ளது. மேலும் ரியா, சுஷாந்தின் எந்தவொரு வங்கிக் கணக்குகளிலும் கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர் அல்ல என்றும் கண்டறிந்துள்ளது. ஆனாலும் ரியாவும் அவரது சகோதரரும் இரண்டு நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர். ஃப்ரண்ட் இந்தியா ஃபார் வேர்ல்ட் பவுண்டேஷன் மற்றும் விஜ்த்ரேஜ் ரியாலிடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அந்நிறுவனங்கள்.

ரியா மற்றும் அவரது குடும்பத்தினரால் இரண்டு சொத்துகள் எப்படி வாங்கப்பட்டது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஃப்ரண்ட் இந்தியா 2020 ஜனவரியிலும், விவிட்ரேஜ் 2019 செப்டம்பரில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 ம் தேதி, பாட்னாவில் சுஷாந்தின் தந்தை கே கே சிங், நடிகை ரியா மற்றும் அவரது உறவினர்கள் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்தார். இதனடிப்படையில் இப்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.