நடிகர் சூர்யாவால் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அகரம் அறக்கட்டளை. சமூக அக்கறை கொண்ட சூர்யா மற்றும் கார்த்தி ஒவ்வொரு ஆண்டும் அகரம் அறக்கட்டளையின் மூலம் திறமை இருந்தும்,கல்வி கற்க முடியாமல் வறுமையின் பிடியில் இருக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகின்றனர், இப்பொழுது அகரம் அறகட்டளை இந்த ஆண்டும் திறமையுள்ள மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்க உள்ளது .இப்பொழுது அதற்கான தகுதியான மாணவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன . இதற்காக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது.
அரசு மாணவர்கள் உயர் கல்வி பெற அகரம் அறக்கட்டளை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறது , இதுவரை 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்று வருவதாகவும் ,2019 ஆம் ஆண்டு தேர்வு எழுதும் ப்ளஸ் 2 மாணவர்களில் தகுதியும் திறமையும் உள்ள மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் . அது மட்டுமல்லாமல் திறமை இருந்தும் வறுமையின் காரணமாக கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.