தன்னை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டிய எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் அளித்த புகார் தொடர்பான விசாரணையில் முன் ஜாமீன் கோரி பாலிவுட் நடிகை சன்னி லியோன் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
சன்னி லியோன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பணம் பெற்றுக்கொண்ட பின்னர் அதில் பங்கேற்கத் தவறிவிட்டார் என்று எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் புகார் அளித்துள்ளார். சன்னி லியோன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஒரு நாள் கழித்து தற்போது உயர் நீதிமன்றத்தை நாடினார். தற்போது கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சன்னி லியோனை குற்றவியல் கிளை அதிகாரிகள் விசாரித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர் ஷியாஸ், 29 லட்சம் ரூபாய் தொகையை சன்னிலியோன் மோசடி செய்ததாக புகார் அளித்தார்.
முன் ஜாமீன் கோரிய சன்னி லியோன் நீதிமன்றத்தில், “அமைப்பாளர்களின் குறைபாடு காரணமாக நிகழ்வு ரத்துசெய்யப்பட்டதாகவும், நிகழ்வின் அமைப்பாளர்களுடன் ஒத்துழைக்க பல முறை தனது கால அட்டவணையை மாற்றினேன். ஆனால் அவர்கள் ஒரு தேதியை இறுதி செய்யாமல் தொடர்ந்து இழுத்தடித்தனர்” என்று அவர் கூறினார்.