சினிமா

இந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காததைக் குறித்து நான் ஏமாற்றமடையவில்லை - ஸ்ருதிஹாசன்

இந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காததைக் குறித்து நான் ஏமாற்றமடையவில்லை - ஸ்ருதிஹாசன்

Sinekadhara

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் ஸ்ருதி ஹாசன். கொரோனா ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தற்போது தெலுங்கில் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் கிராக் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

2009ஆம் ஆண்டு ‘லக்’ என்ற படத்தின்மூலம் இந்தி திரையுலகின் அறிமுகமான ஸ்ருதிக்கு அதற்குப்பிறகு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் இந்தியில் டிக்மான்ஸு துலியா இயக்கத்தில் நடித்த ’யாரா’, ஜீ5 தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.அவரிடம் இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வராதது குறித்து ஏமாற்றமடையவில்லையா? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு நாசூக்காக பதிலளித்த அவர், ‘’நான் இல்லாததைக் குறித்து நீங்கள் ஏமாற்றமடைந்துவிட்டீர்களா? அனைத்து மொழிகளிலும் நான் நடித்த அனைத்துப் படங்களுக்கும் நன்றி கூறுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா ஊரடங்கு குறித்து பேசிய அவர், ‘’ஊரடங்கால் ஆறு மாதங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்தபோது வித்தியாசமான இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த திரைப்படக் குழுவின் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.