சினிமா

சிம்பு எனக்கு காட்ஃபாதர் மாதிரி: சந்தானம் நெகிழ்ச்சி!

சிம்பு எனக்கு காட்ஃபாதர் மாதிரி: சந்தானம் நெகிழ்ச்சி!

webteam

’சிம்பு எனக்கு காட்ஃபாதர் மாதிரி, அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று நடிகர் சந்தானம் சொன்னார். 

விடிவி கணேஷ் தயாரிப்பில், சந்தானம், வைபவி ஷாண்டில்யா, விவேக், ரோபோ, பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சக்க போடு போடு ராஜா’. நடிகர் சிம்பு இதற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், சந்தானம் பேசியதாவது:
எந்த தருணத்துலயும் என்னை விட்டுக்கொடுக்காத, என்னுடன் நிற்கும் நண்பன் ஆர்யா.  இந்தப் பட போஸ்டர்ல சட்டையில்லாம வெற்றுடம்போட நிற்கற மாதிரி இருக்கு. இதுக்கு காரணம் ஆர்யாதான். அவர் கூட நடிக்கும்போதுதான், ’இதைதான் சாப்பிடணும், இப்படித்தான் இருக்கணும்னு அவர் சொன்னார். ’நான் காமெடியன் தானே’ன்னு சொன்னேன். ’அதனாலென்ன, நீ ஒரு நடிகன். உன்னை நிறைய பேர் ஃபாலோ பண்ணுவாங்க’ன்னு ஆர்யா சொன்னார். பிறகுதான் அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். ஆர்யா, ஜிம்முக்கும் சைக்கிளிங்குக்கும் செலவு பண்ற நேரத்தை விட்டுட்டு ஷூட்டிங்குக்கு செலவு பண்ணினா, இன்னைக்கு இந்தி லெவல்ல பெரிய ஹீரோவா ஆகியிருப்பார். பாண்டிச்சேரில ஷூட்டிங் வச்சா, அங்க எல்லாம் கிடைக்குமேன்னு நான் சந்தோஷமாயிடுவேன். ஆனா, ஆர்யாவுக்கு வேற சந்தோஷம். இங்கயிருந்து சைக்கிள்லயே அங்க வந்திடலாமேன்னு நினைப்பார்.

நான் ஜெயிச்சே ஆகணுங்கறதுல முக்கியமா இருக்கறவர் டைரக்டர் ராஜேஷ். இந்தப் படம் இந்தளவுக்கு வந்ததுக்கு காரணம், என் நண்பர் சிம்புதான். இந்தப் படத்துக்கு மியூசிக் பண்ண, ஹாரிஸ் ஜெயராஜைதான் பார்த்தோம். அவர் பிசியா இருந்தார். அப்பதான் தயாரிப்பாளர் விடிவி சொன்னார், ’சிம்புகிட்ட கேட்டா என்ன?’ன்னு. எனக்கு தயக்கம். ’அவர் ஹீரோவா இருக்கார். எனக்காக இசை அமைப்பாரா?’ன்னு கேட்டேன். விடிவி சொன்னார், ’கண்டிப்பா உனக்காகன்னா பண்ணுவார்’னு. அதே போலதான் நடந்தது. சிம்பு என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்காரான்னு அப்புறம்தான் தெரிஞ்சது. சிம்பு மேல பலருக்கு கோபம் இருக்கலாம். ஆனா, சிம்பு எனக்கு காட்ஃபாதர் மாதிரி. அவருக்கு கடைசிவரைக்கும் உண்மையுள்ளவனா இருப்பேன். இந்தப் படத்துல சிம்பு இசையில யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கார். இன்னொரு பாடலை, டி.ராஜேந்தர் சார் பாடியிருக்கார். அது பக்கா கமர்சியலா இருக்கார்.

இவ்வாறு சந்தானம் பேசினார்.