ரஜினிகாந்த் நடிப்பில் மேற்குவங்கத்தில் நடக்கவிருந்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இன்னும் 10 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. இதற்காக மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவின் அருகே உள்ள ஒரு இடத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அங்கு ரஜினிகாந்தின் காட்சிக்கள் நான்கு நாட்கள் படமாக்கவிருந்தனர். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ஒரு சில காரணங்களால் மேற்குவங்கத்தில் நடைபெறவிருந்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் படமாக்க வேண்டிய காட்சிகளை நாளை மற்றும் நாளை மறுநாள் படமாக்குகின்றனர். இதற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். அதை முடித்த பிறகு மேற்கு வங்கத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் என்பது குறித்து படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.