பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் ராஜமவுளிக்கும், படக்குழுவினருக்கும் கதாநாயகன் பிரபாஸ் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
பிரபாஸ் எழுதியுள்ள கடிதத்தில், பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியுடன் சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் வெளியான பொன்னான நாளின் நினைவுகளை அசைப்போடுவது கூட அருமையான விஷயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு தன்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், இந்த வேளையில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்வதாக பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில்..
"இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாட்களின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய, அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ். எஸ். ராஜமௌலி சாருக்கும், பாகுபலி குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை, நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்" என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.