சினிமா

அக்‌ஷய் குமாரின் ‘பேட்மேன்’: தமிழரின் கதை என்பதால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அக்‌ஷய் குமாரின் ‘பேட்மேன்’: தமிழரின் கதை என்பதால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

webteam

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படம் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பத்தூர் மாவட்டத்தின் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் முருகானந்தம். இவரது வாழ்க்கையை கதையாக தொகுத்து இயக்குநர் பல்கி படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பேட்மேன் படம் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், அனைத்து சூப்பர் ஹீரோக்கள் தொப்பியுடன் பிறப்பதில்லை; ஆனால் பேட்மேன் படம் ஒரு நிஜ சூப்பர் ஹீரோவின் கதை என்று தெரிவித்துள்ளார். இந்தக் கதையில் கதாநாயகனாக குறிப்பிடப்பட்டுள்ள அருணாச்சலம் முருகானந்தம், பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நேப்கின் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து, முருகானந்தம் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மூலம் இந்தியா முழுமையிலுமுள்ள ஊரகப் பெண்களுக்கு விற்று வருகிறார். இவருக்கு இந்திய அரசு சார்பில் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பேட்மேன் திரைப்படத்திற்கு தமிழகத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.