சினிமா

நயன்தாராவின் ஆக்‌ஷன் காட்சிகள் அருமையாக இருக்கும்” -‘நெற்றிக்கண்’ எடிட்டர் பேட்டி

நயன்தாராவின் ஆக்‌ஷன் காட்சிகள் அருமையாக இருக்கும்” -‘நெற்றிக்கண்’ எடிட்டர் பேட்டி

PT

“நெற்றிக்கண்” படத்தில் நயன்தாராவின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் இருக்கை நுனிக்கே கொண்டுவந்து விடும் என அப்படத்தின் படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் 65வது படமாக வெளிவரவிருக்கும் படம் “நெற்றிக்கண்”. இப்படத்தை “நானும் ரெளடிதான்” “தானா சேர்ந்த கூட்டம்” ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். சித்தார்த் நடிப்பில் வெளியான “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கப் பயன்படுத்தும் பிரெய்லி எழுத்தில் நயன்தாரா கை வைத்திருப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இப்படத்தின் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும் போது “ நெற்றிக்கண் படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு த்ரில்லர் படம். கிட்டத்தட்டப் படத்தின் 60 சதவீத படப்படிப்பு முடிவடைந்து விட்டது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக்காட்சிகளில் நயன்தாராவின் நடிப்பு நிச்சயம் ரசிகர்களைக் கவரும் விதமாக இருக்கும். நெற்றிக்கண் படத்தின் போஸ்டர் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கப் பயன்படும் பிரெய்லி எழுத்து வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்தப் போஸ்டர் மக்களிடையே படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பார்வைக் குறைபாடாக இருக்குமா என்ற கேள்வியை ஆச்சரியத்துடன் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.