சினிமா

“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா 

“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா 

rajakannan

இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் தேவா, “வரும் டிசம்பர் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் லைவ் மியூசிக் நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது. அதில் என்னுடைய பாட்டுக்கு இசை கருவிகளை இசைத்தவர்கள் இசையமைக்கவுள்ளனர். நான் வெளி நாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்துள்ளேன். இங்கு இது தான் முதல்முறை. இப்போது உள்ள இசை நன்றாக உள்ளது. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப சிறப்பாக உள்ளது. அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பாட்ஷா உள்ளிட்ட படங்களில் பாடல்களை தேர்வு செய்தவர்கள் இயக்குனர்கள்.

ரஜினி அரசியல் குறித்து நான் சொல்ல எதுவுமில்லை. அது அவருடைய விருப்பம்.  என் பாடல்களை அனுமதி பெறுகிறார்களா என்று கேட்கிறார்கள். நான் பாடட்டும் என்று தான் சொல்கிறேன். கானா பாடல்களை நன்றாக எழுதுகிறார்கள் தற்போது” என்றார்.

சினேகன் பேசுகையில், ‘அங்கீகாரம் தான் மனிதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும். அந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனக்கு வரவேண்டிய ராயல்டி 10-12 ஆண்டுகளாக வரவில்லை. எங்கள் அமைப்பில் தெரிவித்துள்ளேன்’ என்று கூறினார்.

 மக்கள் நீதி மய்யம் இடைதேர்தலில் நிற்காதது குறித்த கேள்விக்கு, ‘கட்சி கிராமங்களை நோக்கி கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம், வருகின்ற தேர்தல்களில் நிச்சயம் போட்டியிடுவோம்’ என்று அவர் பதில் அளித்தார். மேலும், ‘ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் செல்லமாட்டேன். யாருக்காவும் கமலை விட்டு செல்லமாட்டேன்’ என்று கூறினார். 

கமல் தான் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, ‘கமல் கூறியது போல நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஜெயக்குமார்’ என்றார் சிநேகன்.