வழக்கமாக கலை வாரிசுகள், சினிமா திரையில் என்ட்ரி கொடுக்க அவரது பெற்றோரின் பெயரை விசிட்டிங் கார்டாக பயன்படுத்திக் கொள்வர். தமிழ் சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள யுவன்ஷங்கர் ராஜாவின் என்ட்ரிக்கு அவரது அப்பா இளையராஜாவின் பெயர் பெரும் பலமாக அமைந்திருந்தாலும் தனது தனித்திறனின் மூலம் நிலைத்து நின்று வென்றவர் யுவன். அவருக்கு இன்று பிறந்த நாள்.
90ஸ் கிட்ஸின் பேவரைட் இசையமைப்பாளர்களில் யுவன் என்றுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். காதல், சோகம், கொண்டாட்டம், நட்பு, உறவு என வாழ்வின் சுகதுக்கங்கள் அனைத்திலும் யுவனின் பாடல்கள் பலருக்கு எனர்ஜி டானிக்காக இருந்து வருகிறது. இதே நாளில் 1979 இல் சென்னையில் பிறந்தார் யுவன்.
அவரது பதினாறாவது வயதில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார். 2001 இல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் பிரேக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
தொடர்ந்து நந்தா, மௌனம் பேசியதே, பருத்திவீரன் என பல படங்களுக்கு இசையமைத்த யுவன் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து புதிய இசை கோர்வையோடு ட்ரெண்ட் செய்ததில் யுவனின் பங்கு அதிகம். ‘ஆசை நூறுவகை’ பாடலை முதன்முதலாக குறும்பு படத்தில் ரீமேக் செய்தவரும் அவர் தான்.
அதே போல தமிழ் சினிமாவில் முதன்முதலில் ‘வானம்’ படத்தின் சிங்கிள் டிரேக் பாடலை வெளியிட்டு டிரெண்ட் செய்தவரும் யுவன் தான்.
வெஸ்டர்ன் மியூசிக் எலிமெண்ட்களை தனது இசையில் சேர்ப்பதில் யுவன் வல்லவர். மெலடி, ஹிப் ஹாப் என மியூசிக்கின் அத்தனை ஜானர்களிலும் மெட்டு அமைப்பதில் யுவன் கிங். அவரது பாடல்களில் இளமை நிரம்பியிருப்பதால் ‘யூத் ஐகான்’ என போற்றப்படும் யுவன் சமயங்களில் அவரது வாய்ஸ் மூலமாவும் ரசிகர்களை மெஸ்மெரிக்க செய்வார்.
இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ள யுவனின் மெட்டில் வெளிவந்த ‘ரவுடி பேபி’ பாடல் வேற லெவல் ஹிட்.
அடுத்து வரும் நாட்களில் தனது மெட்டுக்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர உள்ளார்.
ஹேப்பி பர்த் டே...