மோகன்லால் நடிக்கும் ஒடியன் மற்றும் அவரது மகன் ப்ரணவ் மோகன்லால் நடிக்கும் ஆதி ஆகிய 2 படங்களுக்கும் ஒரே நாளில் பூஜை போடப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடந்த படபூஜை விழாவில் மோகன்லான், ப்ரணவ் ஆகியோர் கலந்துகொண்டனர். கேரள மாநிலத்தில் வாழ்ந்த ஒடியன் எனும் மலைவாழ் இனத்தின் கடைசி மனிதராக ஒடியன் மாணிக்கன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தை புதுமுகம் ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். மலையாள திரையுலகில் முதன் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதேபோல, த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமாகும் படத்துக்கு ஆதி என்று பெயரிடப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் வகை படங்களை இயக்குவதில் வல்லவரான ஜீத்து ஜோசப், அதே ஜானரில் இந்த படத்தையும் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.