சினிமா

'மாஸ்டர்' ரொமான்டிக் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!

'மாஸ்டர்' ரொமான்டிக் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!

sharpana

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி விஜய்யின் காதல், ரொமான்டிக் ப்ரோமோ வீடியோவை  வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிரது படக்குழு.

வரும் 13-ஆம் தேதி ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த தீபாவளியன்று மாஸ்டர் பட டீசர் மட்டும் வெளியானது. ஆனால், ட்ரைலரை வெளியிடவில்லை. இதனால், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு.

அதில், “இதுக்கு முன்னாடி இங்க வந்தவங்க எல்லாம் உயிர் பயத்துல ஓடிப்போயிருக்கலாம். என் கதையே வேற.. முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” என்று பேசியதை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், விஜய்யின் காதல், ரொமான்டிக் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ’எங்க காலேஜுக்கு புதுசா ஒரு டீச்சர் ஒருத்தவங்க வந்தாங்க. ஒங்கக்கா மக்கா அப்படி ஒரு லவ்வுடா’ என்று விஜய் காதல் சிலிர்ப்புடன் பேச ’அந்தக் கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோணாதா’ எனயுவன் குரலில் பாடல் ஒலிக்கிறது. இந்தப் ப்ரோமோ வீடியோவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.