ஜோதிகா ஓட்டிய பைக்கில் உட்கார, நடிகை ஊர்வசி பயந்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
’குற்றல் கடிதல்’படத்துக்குப் பிறகு பிரம்மா இயக்கும் படம், ‘மகளிர் மட்டும்’. ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், பாவல் உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரம்மா கூறும்போது, ‘இந்தப் படத்தின் கதை ரெடியானதும் ஜோதிகாவுக்குப் பொருத்தமானதாக இருந்ததால் அவரிடன் சொன்னேன். சில இடங்களில் சீரியசாகவும் சில இடங்களில் சிரித்தும் கதைக் கேட்டார். இந்தப் படம் வரவேற்பைப் பெறும் என்று அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. பிறகு சூர்யா சாரிடம் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. நானே தயாரிக்கிறேன் என்றார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைதான் இது. ‘மகளிர்மட்டும்’ டைட்டிலை கமல்ஹாசனிடம் பேசி, சூர்யாவே வாங்கிக் கொடுத்தார். இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான். ஆக்ரா ரோட்டில் ஜோதிகா புல்லட் ஓட்டும் காட்சியை எடுத்தோம். பின்னால் ஊர்வசியை உட்காரச் சொன்னோம். அவர் பயந்தார். ‘எனக்கும் பைக்குக்கும் ராசியே கிடையாது’என்று தயங்கினார். பிறகு சம்மதிக்க வைத்து யாருக்கும் தெரியாமல் கேமரா வைத்து லைவ்வாக படமாக்கினோம். நடிகைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் செட், பிக்னிக் வந்த மாதிரி இருக்கும்’ என்றார்.