'லியோ'  புதிய தலைமுறை
சினிமா

"விஜய்யை கட்டாயப்படுத்தியே அந்த வார்த்தையை பேச வைத்தேன்; நானே அதற்கு பொறுப்பு” - லோகேஷ் விளக்கம்

லியோ படத்தில் விஜய்யை கட்டாயப்படுத்தியே ஆபாச வார்த்தையை பேச வைத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு சர்ச்சையையும் கிளப்பியது.

அதாவது, லியோ படத்தில் நடிகர் விஜய் பேசிய ஆபாச வார்த்தை மிகப்பெரிய அளவில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள குடும்ப ரசிகர்களை அதிக அளவில் கொண்ட விஜய் இப்படியொரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கக் கூடாது என்று ஒரு தரப்பினரும், இல்லை.. படித்தின் கதை தான் சில விஷயங்களை தீர்மானிக்கும், வாழ்க்கையில் இல்லாததையா விஜய் பேசிவிட்டார் என மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் பேசிய வார்த்தைக்கு விளக்கமளித்துள்ளார் இயக்குநர் யோகேஷ் கனகராஜ். புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசுகையில், “அந்த கதைக்கு அவ்வார்த்தையானது தேவைப்பட்டது. அத்தருணத்தில் ஏற்பட்ட இமோஷனுக்கு தேவைபட்டது. அதாவது, நம்மை அறியாமல் ஒரு கட்டுப்பாட்டை இழந்து பேசுவோமே அப்படி தான் அந்த வார்த்தையும். அந்தப் படக்காட்சியை எடுக்கப்போவதற்கு முன்பு விஜய் சார் என்னிடத்தின் வந்துகேட்டார். ஆனால் எப்பொதும் எதுவும் இதுபோல கேட்க மாட்டார். அன்று அவர் கேட்டது, “இது ஓக்கேவா பா, நான் பேசலாம் தானே, இல்லை எதாவது தப்பாக இருக்குமா?” என்று என்று கேட்டதற்கு,

லோகேஷ் கனகராஜ்- லியோ

நான் தான் அவரை கட்டாயப்படுத்தி பேச சொன்னேன். இதை பேசுங்கள். இந்த கதாபாத்திரத்திற்கு இது சரியாக இருக்கும் என்று கூறினேன். நடிகர் விஜய் இந்த வசனத்தை கூறவில்லை. படத்தில் இருக்கும் பார்த்திபன் கதாப்பாத்திரம் தான் அதை பேசியது. அதை பேச சொன்னதும் நான்தான். அதற்கான பொறுப்பை நான் ஏற்று கொள்கிறேன்.

ட்ரெய்லருக்கு நடுவில் போகும் லீடுக்கும் எனக்கு அந்த வசனம் தேவைப்பட்டது. அதற்கு தான் அதை உபயோகப்படுத்தினேன். திரையரங்குகளில் நிச்சயம் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார்.