சினிமா

நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அழைப்பு, கரீனா கபூர் மறுப்பு!

நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அழைப்பு, கரீனா கபூர் மறுப்பு!

webteam

தான் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். 

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர். இவர் இந்தி ஹீரோ சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். சைஃப் அலிகானின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான மன்சூர் அலிகான் பட்டோடி, போபாலில் பிறந்தவர். 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோற்றார். 

இந்நிலையில் பட்டோடியின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை கரீனா கபூரை, போபால் தொகுதியில் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று போபால் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

போபால் காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் கூறும்போது, ‘’ கடந்த 25-30 வருடமாக போபாலில் காங்கிரஸ் வென்றதே இல்லை. பாஜகவி டம் இருந்து இந்த தொகுதியை கைப்பற்ற ஒரு புதுமுகத்தை களமிறக்கலாம் என்பது எங்கள் எண்ணம். கரீனா கபூர், இந்த மண்ணின் மருமக ளாகி விட்டார்.

அதனால், அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதை ராகுல் காந்திக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை கரீனாவும் ஏற்பார் என்று நம்புகிறோம்’’ என்றார். இந்த செய்தி நேற்று பரபரபப்பானது. 

இந்நிலையில், தனக்கு அரசியல் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். ’’என்னை எந்த கட்சியினரும் போட்டி யிடுமாறு கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை.

நான் அரசியல் கட்சியில் இணைவதாக வரும் தகவல்க ளில் உண்மையில்லை. நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்’’ என்று கரீனா தெரிவித்துள்ளார்.