சினிமா

‘விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு? - போஸ்டருடன் வெளியான அப்டேட்

‘விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு? - போஸ்டருடன் வெளியான அப்டேட்

சங்கீதா

கமல்ஹாசன் நடிப்பில் அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்திற்குப் பிறகு, அரசியல் மற்றும் ரியாலிட்டி ஷோவில் முழு கவனம் செலுத்தி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிங் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியிடுகிறது. அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான ‘பத்தல பத்தல’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளது. இதற்கிடையில், நேரு விளையாட்டு அரங்கில் நடந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், தமிழில் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. கமல்ஹாசனின் குரலில் துவங்கிய ட்ரெயிலர் ஆக்ஷ்ன் த்ரில்லராக இருந்தன.

மேலும், தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ ட்ரெயிலர் மெட்டவெர்ஸ் முறையில் வெளியாவதை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மொத்தமாக 173 நிமிடங்கள் அதாவது 2 மணி மற்றும் 53 நிமிடங்கள் ஓடக்கூடியதாக விக்ரம் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 2-ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமெரிக்காவில் பிரீமியர் காட்சி திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பட வெளியீட்டிற்கு 10 தினங்களே உள்ளதால், ‘விக்ரம்’ படத்தின் முன்பதிவு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.