சினிமா

201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

webteam

நடிகர் விஜய்சேதுபதி உட்பட 201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருது “கலைமாமணி”. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

கலைத்துறையில் புகழ்பெற்ற, திறமைமிக்க கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவின் பரிந்துரைத்தபடி, இயல்,இசை,நாடகம், கிராமியம்,நாட்டியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.அந்த வகையில் 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான “கலைமாமணி” விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபு தேவா, சரவணன், பிரசன்னா, பொன்வண்ணன், சந்தானம், சூரி, பி.ராஜசேகர், ஆர்.பாண்டியராஜன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, கானா உலகநாதன், கானா பாலா, நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நடிகைகள் குட்டி பத்மினி, ப்ரியா ஆனந்த், பிரியா மணி, பி.ஆர் வரலட்சுமி, குமரி காஞ்சனா தேவி, நளினி ஆகியோருடன் யுவன் சங்கர் ராஜா, உன்னி மேனன், நிர்மலா பெரியசாமி, பரவை முனியம்மா, ஃப்லிம் நியூஸ் ஆனந்தன் போன்ற 201 பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.