சினிமா

’மாஸ்டர்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்க தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

’மாஸ்டர்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்க தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

webteam

பொங்கலுக்கு வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரத் தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஓடிடி வெளியீடு என்று பலமுறை வதந்திகள் வெளியாகி வந்தன. இறுதியாக, திரையரங்குகளில்தான் படம் வெளியாக முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் திரையரங்குகளில் சுமார் 80% 'மாஸ்டர்' படத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், திரையரங்க உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் 'மாஸ்டர்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிசீலித்து அனுமதி அளிக்கும். தியேட்டரில் ’மாஸ்டர்’ படத்தை வெளியிடும் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தேர்தல் நடத்தி வெற்றி பெற்றவர்கள்தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர். ஓடிடியில் படம் வெளியிடுவது உகந்தது கிடையாது” எனத் தெரிவித்தார்.