சினிமா

ஹார்வர்ட் பல்கலை.யில் ’ஜல்லிக்கட்டு’!

ஹார்வர்ட் பல்கலை.யில் ’ஜல்லிக்கட்டு’!

webteam

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஜல்லிக்கட்டு படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது.

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இது தொடர்பாக சென்னை மெரினாவில் நடந்த அமைதி போராட்டம் பெரும் எழுச்சியாக மாறியது. அரசியல் சார்பற்ற அந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தை மையமாக வைத்து, ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் சினிமா உருவாகிறது.  சந்தோஷ் இயக்கும் இந்த படத்தை அஸ்மிதா புரொடக்‌ஷன் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த நிருபாமா, குருசரவணன் தயாரிக்கின்றனர். வாஷிங்டனை சேர்ந்த ஜெயபால் இணைந்து தயாரித்திருக்கிறார். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர் வாஷிங்டனில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு அமெரிககவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்று இந்தப் படப்பிடிப்பு அங்கு நடந்துள்ளது. அங்கு நடந்துள்ள முதல் இந்திய படம், இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.