வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்துக்கு "மூக்குத்தி அம்மன்" என தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நகைச்சுவை வேடங்களில் நடித்த ஆர் ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாக நடித்தார். அரசியல் பகடி பேசிய அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகவே அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே அடுத்த படமும் நடிக்க ஒப்புக் கொண்டார். அடுத்தப்படத்துக்கு கதையை எழுதி வந்த பாலாஜி, என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து "மூக்குத்தி அம்மன்" படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளையும் அவரே ஏற்றுள்ளார். இந்நிலையில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்காக அவர் நயன்தாராவை அணுகினார். கடந்த சில மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் நயன்தாரா "மூக்குத்தி அம்மன்" படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து படத்தின் போஸ்டரை பட நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படம் 2020 கோடையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.