தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ’த அயர்ன் லேடி’ படத்தில், எம்.ஜி.ஆராக மலையாள நடிகர் இந்திரஜித் நடிக்கிறார்.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்களை எடுப்பது இப்போதைய டிரென்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசிய ல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் வாழ்க்கை கதையும் சினிமாவாகிறது. அவரது கதையை இயக்க இருப்பதாக விஜய், மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர் ஷினி ஆகியோர் தெரிவித்திருந்தனர். பாரதிராஜாவும் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே லிங்குசாமியும், ஜெயலலிதா வாழ்க் கையை படமாக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.
விஜய் இயக்கும் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் விப்ரி மீடியா சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்றும் தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில் நித்யா மேனன் நடிப்பில் ஜெயலலிதான் வாழ்க்கையை,‘தி ஐயன் லேடி’ என்ற பெயரில் படமாக்குகிறார் பிரியதர்ஷினி. அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரியதர்ஷினி வெளியிட்டிருந்தார். அதில், நித்யா மேனன் ஜெயல லிதாவாக மாறி இருந்தார்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்க வைக்க முன்னணி நடிகர்களை கேட்டு வந்தனர். இப்போது மலையாள நடிகர் இந்திரஜித், எம்.ஜி.ஆராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இவர், நடிகர் பிருத்விராஜின் அண்ணன். தமிழில் சில படங்களில் நடித்துள்ள இந்திரஜித், இப்போது, கார்த்திக் நரேன் இயக்கும் ’நரகாசூரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.