சினிமா

’இளையராஜா 75’ விழா: யார் யார் பங்கேற்கிறார்கள்?

’இளையராஜா 75’ விழா: யார் யார் பங்கேற்கிறார்கள்?

webteam

’இளையராஜா 75’ விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.  ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல திரை பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனர். முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ’இசை ராசா’ இளையராஜாவைக் கவுரவிக்கும் பொருட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு விழா எடுக்கிறது. இசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ரூ.10 கோடி நிதி திரட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு முடி வு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. தயாரிப் பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அவர் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.  அவர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். 

தொடர்ந்து நடிகைகள் இனியா, சுனைனா, மஞ்சிமா மோகன், முன்னா, நிக்கி கல்ராணி, சாயிஷா, வேதிகா, இனியா, நடன இயக்குனர் தினேஷ், டேனி ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

நடிகர் யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், கோவை சரளா, கார்த்திக்-ராதா ஆகியோரின் காமெடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஜய் யேசுதாஸ், எஸ்.எஸ்.தமன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் ஆகியோர் இளையராஜாவின் சில பாடல்களை பாடுகின் றனர். 

மறுநாள் 3 ஆம் தேதி நிகழ்ச்சியில் வெளிமாநிலங்களை சேர்ந்த முன்னணி நடிகர்கள் கலந்துகொள்கின்றனர். யார், யார் வரு கிறார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அப்போது இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்காக, ஹங்கேரியில் இருந்து சிம்பொனி இசைக்குழு சென்னை வந்துள்ளது. நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.