இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் சமீபத்தில் ‘புத்தம் புது காலை விடியாதா’ ஆந்தாலஜி படத்தில் ‘முகக்கவச முத்தம்’ வெளியாகி கவனம் ஈர்த்தது. கடைசியாக தனுஷின் ‘மாரி 2’ இயக்கியிருந்தார். இந்த நிலையில், பாலாஜி மோகன் புதிய வெப் சீரிஸை தயாரிக்கிறார். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் விஜயகுமார் இத்தொடரை இயக்குகிறார்.
காமெடி கதைக்களத்தைக்கொண்டு உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, எஸ்பிபி சரண், தன்யா பலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ளப் பகுதிகளில் நடைபெற்றுவரும் நிலையில், முழு படப்பிடிப்பையும் பிப்ரவரியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.