சினிமா

'தர்பார்' படம் நஷ்டமா ? - ரஜினியை சந்திக்க போயஸ் கார்டன் வந்த விநியோகஸ்தர்கள்

'தர்பார்' படம் நஷ்டமா ? - ரஜினியை சந்திக்க போயஸ் கார்டன் வந்த விநியோகஸ்தர்கள்

jagadeesh


தர்பார் படத்தால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விநியோகஸ்தர்கள் இன்று அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வருகை தந்தனர்.

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆ ம் தேதி திரைக்கு வந்தது தர்பார் திரைப்படம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை எனவும் இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை ரஜினிகாந்த் பெற்றுத்தர வேண்டுமென்று நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் 9 மாவட்டங்களின் விநியோகஸ்தர்களும் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு இன்று மதியம் வருகை தந்திருந்தனர்.

 ஆனால் ரஜினிகாந்த் தரப்பில், விநியோகஸ்தர்களை நாளை சந்திப்பதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க மறுத்த விநியோகஸ்தர்கள் நாளை ரஜினியை சந்தித்துப் பேசிய பிறகு இதுகுறித்த தெளிவான விளக்கத்தினை தர இருப்பதாக கூறினர்.