ஜெயிலர் Twitter
சினிமா

Record Maker; 500 கோடியை தாண்டி அலப்பற கிளப்பும் ஜெயிலர்; அதிகாரப்பூர்வமாக வெளியானது வசூல் நிலவரம்!

ஒவ்வொரு நாளும் வசூலில் உச்சத்தை தொட்டு வரும் ஜெயிலர் திரைப்படம் வசூலில் விக்ரமின் சாதையை முறியடிக்கும் என்றே கூறப்பட்டது.

Angeshwar G

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள 'ஜெயிலர்' திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. இதைத் தொடர்ந்து இப்படம், உலகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி வெளியானது.

Jailer

வெளியானது முதலே நேர்மறை விமர்சனங்களைப் பெற்ற ஜெயிலர் திரைப்படம் தொடர்ச்சியாக வசூலில் சாதனை படைத்து வந்தது. பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பிய ஜெயிலர் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்தது, இரண்டாம் நாளில் ரூ.150 கோடி வசூலைக் கடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் வசூலில் உச்சத்தை தொட்டு வரும் ஜெயிலர் திரைப்படம் வசூலில் விக்ரமின் சாதையை முறியடிக்கும் என்றே கூறப்பட்டது. விக்ரம் சுமார் ரூ.430 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 நாட்கள் ஆகும் நிலையில் ரு.525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனை ஜெயிலர் திரைப்படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்