சினிமா

தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் தகராறு: விஷால் பதவி விலக கோரிக்கை!

தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் தகராறு: விஷால் பதவி விலக கோரிக்கை!

webteam

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அடுத்தடுத்து பெரும் பிரச்னை ஏற்பட்டதால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்‌ கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தொடங்கியபோது ஒருதரப்பினர் பிரச்னையை கிளம்பியதால் 12 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் கூட்டம் தொடங்கிய நிலையில் மேடையில் ஏறி முழக்கம் எழுப்பினர். இதனால் தொடர்ந்து பிரச்னை நிலவிய நிலையில்‌ ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் மற்றும் விஷால் தரப்பினர் சமாதானம் பேச முயன்றனர். ஆனால் எவ்வித பயனும் இல்லாததால் 12:45 மணிக்கு கூட்டம் முடித்துவைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது சங்க தலைவர் விஷால் கலந்து கொள்ளவில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலுக்கு செல்ல வேண்டும் என்றால் விஷால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்தரப்பு தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.