சென்னை 14ஆவது சர்வதேச திரைப்பட விழா நாளை (ஜனவரி 5) தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா நடித்த 24, பசங்க 2, அமலாபால் நடித்த ‘அம்மா கணக்கு, விஜய்சேதுபதி நடித்த நானும் ரௌடிதான், தர்மதுரை மற்றும் இறைவி, பிரபுதேவா நடித்த தேவி, ஜோக்கர் உட்பட 12 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ளன. மேலும் இத்திரைப்பட விழாவில் 85 நாடுகளைச் சேர்ந்த 180க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில் பிரேசிலைச் சேர்ந்த 5 படங்கள், ஈரானைச் சேர்ந்த 10 படங்கள், மற்ற மொழிகளிலிருந்து 97 படங்களும் அடங்கும். சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளான ஐநாக்ஸ், வுட்லாண்ட்ஸ், கேஸினோ, ஆர்.கே.வி டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் படங்கள் திரையிடப்படவுள்ளது. சர்வதேச திரைப்பட விழாவின் முதல் நாளான நாளை ஆர்.கே.வி டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்ல் மோர் தென் ஐ கேன் ரெகக்னைஸ், கேஸினோவில் வெண்டோக்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன.