சினிமா

நிறைவு பெற்றது கான் திரைப்பட திருவிழா

நிறைவு பெற்றது கான் திரைப்பட திருவிழா

webteam

பிரான்ஸில் நடைபெற்று வந்த கான் திரைப்பட விழா நேற்று நிறைவுப் பெற்றது.  இவ்விழாவில் ஜப்பானிய திரைப்படம் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது.

பிரான்சில் நடைப்பெற்ற கான் திரைப்பட விழா கடந்த 8 தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுப் பெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் தனுஷ் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’என்ற தமிழ்ப் பட தலைப்பை வெளியிட்டிருந்தார். மேலும் தின்கர் ராவ் இயக்கத்தில் நடிகை அந்தரா ராவ் நடித்துள்ள ‘அஸ்தி’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு சிறப்பித்தார். இதனை தொடந்து நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 10 அடி நீளத்தில் பட்டாம்பூச்சி வடிவத்தில் பட்டு நூல்களால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அந்த ஆடை விழாவைக் கலக்கியது.

இதனையெடுத்து இத்திரைப்பட விழாவில் ஷாப் லிப்டர்ஸ் என்ற ஜப்பானிய திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்தத் திரைப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குநர் ஹிரோகாஸு கோரே இடாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

கறுப்பின காவல் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிளாக்லான்ஸ்மேன் இரண்டாவது இடத்தை பிடித்தது. லெபனானைச் சேர்ந்த பெண் இயக்குநர் நடைன் லபாக்கி எடுத்த கஃபர்நாம் என்ற திரைப்படம் வெண்கலப் பதக்கத்தை பெற்றது. கோல்ட் வார் என்ற திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது போலாந்தின் பாவேல் பாவ்லிக்கோவ்ஸ்கிக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் திரளான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.