ஆண்டி இந்தியன் திரைப்படம் வெளியாகக்கூடாது என தணிக்கை குழுவுக்கு பலர் அழுத்தம் கொடுத்து வருவதாக சினிமா விமர்சகரும், அந்தப் படத்தின் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
யூ டியூப் வலைதளத்தில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் ஆண்டி இந்தியன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் இடம்பெறும் பல காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சான்றிதழ் வழங்க மறுத்தனர். இதன்பின் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை எடுத்துச் சென்றோம். அங்கு படம் பார்த்தவர்கள் 38 இடங்களை நீக்க வேண்டும் மற்றும் 200 இடங்களில் ஆடியோ Mute கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி: மகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்!
இதைத்தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம். தன்னுடைய வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனிக்குழு அமைத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டனர். அதன் அடிப்படையிலேயே தற்போது ஆண்டி இந்தியன் திரைப்படத்திற்கு எந்த காட்சிகளையுன் நீக்காமல் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஆண்டி இந்தியன் திரைப்படம் எந்தவித காட்சிகளும் நீக்கப்படாமல் விரைவில் வெளியாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.