தொடக்கம் முதலே தினேஷ் விசித்திராவை போட்டியாகதான் நினைக்கிறார். விஷ்ணுவிடம் கூட விசித்திரா இந்த வாரம் போய்விடுவார் என்ற ரீதியில் தான் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த டாஸ்கில் வெல்பவர்கள் இறுதிகட்டத்திற்கு செல்வார் என்றும் இதில் வெற்றிபெறாதவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று பிக்பாஸ் தெரிவித்தார்.
இந்த டாஸ்க் கொஞ்சம் கடினமாகதான் இருந்தது. மாயா பயில்வான் போன்று ஒரே கையால் பல செங்கலை அள்ளுகிறார். என்ன அள்ளினாலும் அவரால் ஒரு பாய்ண்டுக்கு மேல் அவரால் எடுக்க முடியவில்லை.
இதில் விஷ்ணு 3 பாயிண்ட் எடுத்து முன்நிலையில் உள்ளார். இது க்ரூப் கேம் என்று மாயாவும், பூர்ணிமாவும் வழக்கம்போல் புலம்புகிறார்கள். நிக்சன் ஒருபடி மேல் போல் தினேஷிடம் டீம்கேம் விளையாடுகிறார்கள் என்று சண்டையிடுகிறார். “கமல் சார் என்ன சொன்னாரு... நீ ஜெய்க்கணும்னு ஆடு இன்னொருத்தர் ஜெய்கணும்னு ஆடாதன்னு சொல்லியிருக்காரு” என்று அவர் கூறியதை நினைவுபடுத்தினார்.
இதே கமல் அடுத்தவர்கள் முன்னேறும் போது அதை நாம் தடுப்பதனால் நாமும் முன்னேறமுடியாது என்றும் சொன்னார். மனதில் வஞ்சகத்தை பூசிக்கொண்டு விளையாடாதீர்கள் என்று பல செய்தியை சொல்லியிருக்கிறார். இந்த விளையாட்டிலேயே தோற்கும் சமயம் பூர்ணிமா தான் எடுத்த முயலை தூ... என்று துப்பி மணியிடம் தருகிறார். இது எந்த மாதிரியான மனநிலை?...
அடுத்தது விசித்திரா மோனோ ஆக்டிங் செய்து காட்டுகிறார். ரசிக்கும் படியாக இருந்தது. இப்படியாக சில சண்டை சச்சரவுகளுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வெற்றிவாய்ப்பை பெறப் போகிறவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தவாரம் விஜய் அல்லது மாயா வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.