பிக்பாஸ் போட்டியாளர்கள் PT
பிக்பாஸ்

’டாக்டரேட்’ நடிகை விசித்திரா to இலக்கியவாதி பவா செல்லத்துரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் பின்னணி!

பல தரப்பு மக்களிடையே பல சீசன்களால் நல்ல வரவேற்பை பெற்றதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது அதன் 7 வது சீசன் நேற்று அதாவது அக்டோபர் 1 ஆம் தேதியில் தொடங்கியது . அது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பற்றி காணலாம்.

Jayashree A

ஐஸ்

”நான் ஒரு டான்சர். எனது ஊர் ஊட்டி. சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு, மிகவும் கஷ்டப்பட்டு பிக்பாஸிற்குள் நுழைந்து இருக்கிறேன்“ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஐஸ். இவருக்கு பரிசு பெட்டியிலிருந்து A என்ற எழுத்து பொறித்த ஜாக்கெட் பரிசாக கிடைக்கிறது.

ஐஸ்

ஜோவிகாவுடன் தனக்கு உண்டான கேப்டன்ஷிப் பதவிக்காக ஐஸ் விவாதம் செய்தநிலையிலும், இருவருக்குள்ளும் யார் கேப்டன் என்ற முடிவு எட்டப்படவில்லை.

விஷ்ணு

“நான் நன்றாக வரவேண்டும் என்று நினைத்தவர் என் சித்தப்பா. பிக்பாஸ் சீசன் 1 பார்த்தவர். விஷ்ணு, நீயும் இதில் கலந்துக்கொள். உலகமே உன்னை பார்க்கும். அதன்மூலம் பெரிய நடிகனாக வரலாம் என்று சொன்னார். ஆனால் சமீபத்தில் அவர் இறந்துவிட்டார்.

விஷ்ணு

அவரின் ஆசையை நிறைவேற்றவே நான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தேன்” என்கிறார் சீரியல் நடிகர் விஷ்ணு.

இவருக்கான பரிசுப் பெட்டிக்குள் ஒரு போட்டோ பிரேம் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். கேப்டன்ஷிப்பில் முடிவு எட்டப்படாத நிலையில் ஜோஷிகாவின் கையில் இருந்த கேப்டன்ஷிப் பேட்ச் இவர் கைக்கு வருகிறது.

மாயா

”நான் மதுரையை சேர்ந்தவள். சினிமாவில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணம் ஆகையால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தேன்” என்கிறார் நடிகை மாயா.

கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்து கவனம் ஈர்த்தவர் மாயா.

மாயா

இவருக்கான பரிசு பெட்டியில் (ஜோக்கர்கள் மூக்கில் பொருத்தும்) ஜோக்கர் கிளமெண்ட் பரிசாக கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். விஷ்ணுவும் மாயாவும் யார் கேப்டனாக இருக்க வேண்டும் என்று போட்டி போடுகிறார்கள். இதில் மாயா விஷ்ணுக்காக விட்டுக் கொடுத்து விடுகிறார். இந்தமுறை கேப்டன் பேட்ச் விஷ்ணுவிடமே இருக்கிறது.

சரவணன்

“எனக்கு பிக்பாஸில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்று அதன் மூலம் சினிமாவிற்குள் நுழையவேண்டும்“ என்ற ஆசையில் வந்ததாக கூறுகிறார் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் சரவணன்.

இவரை வழி அனுப்ப வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நண்பர்கள் இவருக்கு பரிசாக கடலை மிட்டாய் பையை அளித்தனர்.

சரவணன்

மனதில் மகிழ்சியுடனும் கையில் பையுடனும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற சரவணன், அங்கு இருப்பவர்களுக்கு கடலைமிட்டாயை தருகிறார். பிறகு பிக்பாஸ் ரூல்ஸ்படி தனது கேப்டன் பதவிக்காக விஷ்ணுவிடம் விவாதிக்கிறார் இருப்பினும், ‘நண்பனே…எனதுயிர் நண்பனே…” என்ற ரீதியில் விஷ்ணுவுக்காக கேப்டன்ஷிப் பதவியை விட்டுக் கொடுத்து விடுகிறார் சரவணன்.

யுகேந்திரன்

பிண்ணனி பாடகரான மலேசியா வாசுதேவனின் மகனான் யுகேந்திரன் ஒரு பின்னணி பாடகர் மற்றும் நடிகர். பல படங்களில் இவரை பார்த்திருக்கலாம்.

யுகேந்திரன்

“என் அப்பா உங்களை பற்றி அடிக்கடி பேசுவார். 16 வயதினிலே, ஒரு கைதியின் டையரி, இதிலெல்லாம் நீங்கள் அப்பாவுடன் சேர்ந்து பணிபுரிந்ததாக அவர் கூறியிருக்கிறார். பிக்பாஸில் போட்டியாளார்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள தான் நான் வந்து இருக்கிறேன்” என்று கமலிடம் பேசிய யுகேந்திரனுக்கு பரிசு பெட்டிக்குள் ஒரு மூக்கு கண்ணாடி கிடைக்கிறது. தனது அப்பாவின் ஞாபகார்த்தமாக அதை எடுத்துசெல்வதாக கூறிக்கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

இவரை வீட்டிற்குள் இருக்கும் அத்தனை பேரும் வரவேற்கிறார்கள். விஷ்ணு மட்டும் கண்ணும் கருத்துமாக இவரிடம் வந்து தனக்கு கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்குமாறு கேட்க, பதிலுக்கு இவரோ… விஷ்ணுவிடம் ”ஒரு பாட்டை தப்பு இல்லாமல் பாடினால் உனக்கு நான் கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்கிறேன்” என்று கூறுகிறார்.

ஆனால் விஷ்ணு தவறாக பாடியதாக சொல்லி யுகேந்திரன் அந்த கேப்டன்ஷிப்பை விட்டுக் கொடுக்க மறுக்கிறார். இறுதியாக விஷ்ணு.... தனது தோல்வியை ஒப்புக்கொண்டு யுகேந்திரனிடம் தனது கேப்டன் பேட்சை கொடுத்து விடுகிறார்.

விசித்திரா

”பிக் பாஸில் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால், எல்லாரிடத்திலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று, நினைத்து வந்தேன். எனக்கு சிறு வயது முதல் படிக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முடியவில்லை. நான் 8 வது படிக்கும் பொழுதே நடிக்க வந்து விட்டேன்.

விசித்திரா

பிறகு என் படிப்பை தொடர்ந்தேன். கல்யாணத்திற்கு பிறகு படித்து டாக்டரேட் பட்டம் பெற்றேன்” என்று கூறினார்.

இவருக்கான பரிசு பெட்டியில் சைக்காலஜி டாக்டரேட் முடித்த இவரது சர்டிபிகேட் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.

அதிக விவாதம் செய்யாமல், யுகேந்திரனுக்கு தனது கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்து விடுகிறார்.

பவா செல்லத்துரை

”நான் புதுசு புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அது வெற்றியின் உச்சத்தில் வரும் பொழுது அதை நிறுத்தி விட்டு அடுத்த ஒரு புதிய விஷயத்தை செய்ய ஆரம்பிப்பேன். அப்படி ஒன்றுதான் இந்த பிக்பாஸ்” என்கிறார் எழுத்தாளர் இலக்கியவாதி பவா செல்லத்துரை.

பவா செல்லத்துரை

கமல்ஹாசன் இவரிடம் ஒரு புத்தகத்தை பரிந்துரைக்க கேட்கவே இவர் மலையாள மொழிபெயர்ப்பான ‘ சிதம்பர நினைவுகள்’ என்ற புத்தகத்தை பரிந்துரைத்தார். இந்த புத்தகம் இவரது மனைவியான சைலஜா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது என்றும் கூறினார்.

இவருக்கான பரிசு பெட்டிக்குள் ’என்னோடு நான்’ என்ற புத்தகம் கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்.

வீட்டிற்குள் இருந்த அனைவரும் எழுத்தாளர் பவா செல்லத்துரை வரவேற்கின்றனர். அவர் யுகேந்திரனுக்காக தனது கேப்டன்ஷிப் பதவியை விட்டுக் கொடுக்கிறார்.

அனன்யா ராவ்

“நான் யார் என்றும் என் திறமை என்ன? என்பது பற்றி மற்றவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காக தான் நான் பிக்பாஸுக்குள் வந்து இருக்கிறேன்” என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார் பரதநாட்டிய கலைஞரும் மாடலிங் துறையை சார்ந்தவருமான அனன்யா ராவ்.

அனன்யா ரா

இவர் தனது பரிசு பெட்டிக்குள் சதங்கையை பரிசாக பெற்று கொள்கிறார். தனக்கு பிடித்த சதங்கையை அணைத்தப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இவர், யுகேந்திரனின் பாணியிலேயே அவரது கேப்டன் பதவியை பெற அவருக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அந்த டெஸ்ட் என்னவென்றால், “பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்திருக்கும் பெண்கள் எண்ணிக்கை எவ்வளவு? ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு?” என்று கேட்கிறார். இதற்கு பதில் தெரியாமல் யுகேந்திரன் ’திருதிரு’ என்று முழிக்க நேரம் கடந்து விடுகிறது நேரம் ”கடந்து விட்டதால் இருவருமே…கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விடுபடுகிறார்கள் ஆகவே அடுத்து வருபவர்கள் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்” என்று பிக் பாஸ் அசரீரீயாக தகவலை தெரிவிக்கிறார்.

விஜய் வர்மா

“நான் ஒரு டான்ஸர். திருச்சி தான் எனது ஊர். பிழைப்பிற்காக சென்னை வந்தோம். எனக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. நடனப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குதான் நடனம் கற்றுக்கொண்டேன். அதையே எனது தொழிலாக மாற்றிக்கொண்டேன், எனது உழைப்பினால் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று, தற்பொழுது பிக்பாஸ் வந்து சேர்ந்துள்ளேன். எனது உழைப்பும் திறமையும் அனைவருக்கும் தெரியவேண்டும். அதற்கான ஒரு நல்ல தளம் தான் இது. இதன் மூலம் நான் வெளிச்சத்திற்கு வருவேன்” என்று விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி அசத்திய டான்சர் விஜய் வர்மா. அவருக்கு பரிசாக ஒரு குட்டி பைக் கையில் கிடைத்தது.

விஜய் வர்மா

எவ்வித போட்டியும் இல்லாத்தால், பிக் பாஸ் அசரீரி கேப்டன்ஷிப் பேண்டை விஜய்வர்மாவிடம் வழங்குமாறு யுகேந்திரனிடம் தெரிவிக்க, யுகேந்திரன் தன்னிடம் இருந்த கேப்டன் பேண்டை விஜய்யிடம் தந்துவிடுகிறார். ஆகையால் இந்த வாரம் வாரம் விஜய் வர்மா கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

”சிவப்பு கலர் கையுறை” - நிறைவாக நடந்தது இதுதான்!

நிறைவாக கமல்ஹாசன் கன்ஸ்ட்ரக்சன் ரூமில் அனைவருக்கும் ஒரு பரிசு பொருள் இருப்பதாக கூறவும் அதை எடுத்து வந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொள்கிறார்கள். அது ஒரு சிவப்பு கலர் கையுறை. இது எதற்கு என்று போட்டியாளர்களுடன் சேர்ந்து நாமும் யோசிக்கையில், அதற்கான காரணத்தை உடைக்கிறார் கமலஹாசன்.

“இது ஒரு ஆயுதம். இந்த வீட்டில் யார் ஒருவருக்கோ அல்லது நண்பர்களுக்கோ அநீதி ஏற்பட்டு அதற்கு தகுந்த நீதி கிடைக்காமல் இருந்தால் அடுத்த வாரம் அகம் டிவியில் என்னை பார்க்கிறவர்கள் இந்த கையுரையை அணிந்தபடி இருக்க வேண்டும். உங்களின் அநீதிக்கு, நான் தீர்வு கூறிய பின் தான் அடுத்த கட்டத்திற்கு நான் நகர்வேன்” என்று கூறி பிக் பாஸை முடித்துக் கொள்கிறார் கமலஹாசன்.

இனி நாள் தோறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதையும் அதில் அரங்கேறும் சுவாரஸ்யங்களையும் தவறாமல் அறிந்து கொள்ள புதிய தலைமுறையுடன் இணைந்து இருங்கள்.