ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு போல், திரைப்பட டிக்கெட்டுகளையும் பதிவு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தியேட்டர்களில் டிக்கெட் வழங்கும் முறை, வெளிப்படைத்தன்மை, விலையையும் கண்காணிக்க ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு போல், திரைப்பட டிக்கெட்டுகளையும் பதிவு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆன்லைன் டிக்கெட் முறையை ஆந்திர மாநில திரைப்படம் தொலைக்காட்சி மற்றும் தியேட்டர் மேம்பாட்டுக் கழகம் நிர்வகிக்கும். ப்ளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனையாவதை தடுப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்த உத்தரவு தெலுங்கு சினிமாத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான குழுவினர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் சந்தித்து டிக்கெட் விலை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.