சினிமா

’கோலி பற்றி கேட்பார்களோ’ என பேட்டியை முடித்த அனுஷ்கா!

’கோலி பற்றி கேட்பார்களோ’ என பேட்டியை முடித்த அனுஷ்கா!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி. இவரது காதலி இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மா. இவரும் சமீபத்தில்தான் அமெரிக்காவில் ஜாலி டூர் அடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ஷாரூக்கானுடன் அனுஷ்கா நடித்துள்ள, ’ஜப் ஹாரி மெட் சேஜல்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனுஷ்காவிடம், மீடியா கேள்விகள் கேட்டது. படம் பற்றி பதில் சொல்லிக்கொண்டு வந்தவரிடம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பைனல் சென்றிருப்பது பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அனுஷ்கா, இது சிறப்பான விஷயம். அவர்களை ஆதரிக்கிறேன் என்றார். அடுத்து, ’நீங்கள் சமீபகாலமாக அதிகமாக கிரிக்கெட் பார்க்கிறீர்கள் என்று அறிகிறோம்...’ என்று ஒருவர் ஆரம்பித்ததும், கோலியை பற்றிதான் கேட்கப் போகிறார்கள் என நினைத்து, ‘இப்போது பேட்டியின் முடிவுக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன். என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது தெரியும். படத்தை மட்டும் பற்றி கேள்வி கேட்டால் இன்னும் பேசலாம்’ என எழுந்து சென்றுவிட்டார்.