சினிமா

தேசிய கீதத்தை சைகையால் செய்து அசத்திய அமிதாப் பச்சன்

தேசிய கீதத்தை சைகையால் செய்து அசத்திய அமிதாப் பச்சன்

webteam

மாற்றுதிறனாளி குழந்தைகள் தேசிய கீதத்தின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்காக தேசிய கீதம் சைகை மொழியில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுடன், நடிகர் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன பாடல் இந்தியாவின் தேசியக் கீதமாக உள்ளது. இந்தப் பாடலை மாற்றுதிறனாளி குழந்தைகள் சைகை மொழியில் பாடி வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே நேற்று வெளியிட்டார். இனி வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத குழந்தைகள் பள்ளிகளிலும், அரசு விழாக்களிலும் இந்த சைகை மொழி கீதத்தை பாடலாம். இந்த வீடியோவை கோவிந்த் நிஹாலனி என்பவர் உருவாக்கியுள்ளார். மாற்றுதிறனாளி குழந்தைகளுடன் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து பாடி உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.