சினிமா

முதல் நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர் - ஹூமா குரோஷி பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவு

முதல் நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர் - ஹூமா குரோஷி பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவு

நிவேதா ஜெகராஜா

முதல் நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர் ஒருவர் பற்றி அப்படத்தின் ஹீரோயின் ஹூமா குரோஷி ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பகிர்ந்திருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36.14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளில் ரூ.24.62 கோடி ரூபாயும் தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாய் ‘வலிமை’ ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரியும் குமார் என்ற நபர், இப்படத்தை முதல்நாளிலேயே 5 முறை பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு செய்துள்ளார் `வலிமை’ பட நாயகி ஹூமா குரோஷி. அவர் தனது அப்பதிவில், “இவர்தான் குமார். இவர் சென்னை க்ரௌன் பளாசாவில் பணிபுரிகிறார். பிப்ரவரி 24-ம் தேதி வலிமை வெளியானவுடன், அன்றைய தினமே அப்படத்தை 5 முறை பார்த்திருக்கிறார் இவர். லவ் யூ குமார். நீங்கள் நிஜமாகவே மிகப்பெரிய ரசிகர் எங்களுக்கு! உங்களுடைய அன்புக்கு எங்களது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஹூமா குரோஷியின் பதிவின்கீழ் அஜித் ரசிகர்கள் பலரும் தங்களும் ஒரே நாளில் 5,6 ஷோக்கள் பார்த்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.