மன்சூர் அலிகான். லோகேஷ் pt web
சினிமா

“தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு”- லோகேஷை பாலஸ்தீன போருக்கு அழைக்கும் மன்சூர் அலிகான்

“லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல... அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு' !! .. இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்” மன்சூர் அலிகான்

Angeshwar G

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியாகி இருந்தாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்த வண்ணம் தான் உள்ளன.

இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், சாண்டி, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான கதாப்பாத்திரத்திற்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனமும் பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான், இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்திருந்தார். படத்தில் முக்கியமான இடத்தில் அவரது கதாப்பாத்திரம் கொண்டு வரப்பட்டிருந்தாலும் கதாப்பாத்திரம் பெருமளவு பேசப்படவில்லை. படம் வெளியாவதற்கு முன்பு மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதற்கு காரணம் கைதி படத்தின் கதையையே முதலில் மன்சூர் அலிகானை மனதில் வைத்து எழுதியதாக லோகேஷ் கூறியிருந்தார். அந்த அளவிற்கு மன்சூர் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது என கருதப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜை வம்புக்கு இழுப்பதுபோல் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை குடுத்து, ஒன்றை வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்! ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான்!

லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல... அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு' !! .. இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்!

500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்! அப்பாவிங்க சாகறாங்க... சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு... வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!” என தெரிவித்துள்ளார்.