சினிமா

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை ரூ.112 கோடிக்கு கைப்பற்றிய ஓடிடி தளம்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை ரூ.112 கோடிக்கு கைப்பற்றிய ஓடிடி தளம்

sharpana

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ‘விக்ரம்’ உலகம் முழுக்க வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அனைத்து மொழிகளிலும் 112 கோடிக்கு ஸ்டார் குழுமம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், படத்தின் பட்ஜெட் முதலீட்டை டிஜிட்டல் உரிமையிலேயே லாபத்தோடு எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.