சினிமா

கமிஷனர் அலுவலகத்தில் பிரபல காமெடி நடிகர் மீது மனைவி புகார்

கமிஷனர் அலுவலகத்தில் பிரபல காமெடி நடிகர் மீது மனைவி புகார்

webteam

கொடுமைப்படுத்துவதாக நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி நித்யா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக குடித்து விட்டு தன்னை சித்ரவதை செய்வதாகவும், முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், சாதியைச் சொல்லித் திட்டுவதால் சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தனது கணவர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  
காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து அவர்கள் இருவரையும் அழைத்த காவல்துறையினர் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நித்யா தனது கணவர் பாலாஜி மீது புகார் மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,  தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். மே மாதம் தாடி பாலாஜி அடித்ததில் எனது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து  என்னை திருமணம் செய்து கொண்டார். பலபேருடன் தொடர்புபடுத்திப் பேசி என்னை
சித்ரவதை செய்கிறார். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்ததாக தெரிவித்துள்ளார்.