சினிமா

24 மணி நேரத்தில் யூடியூப்பில் 10 கோடி வியூஸ் - ரெக்கார்டுகளை உடைத்தெறிந்த கே.ஜி.எப் டீஸர்

24 மணி நேரத்தில் யூடியூப்பில் 10 கோடி வியூஸ் - ரெக்கார்டுகளை உடைத்தெறிந்த கே.ஜி.எப் டீஸர்

webteam

கே.ஜி.எப் படத்தின் டீஸர் கடந்த 24 மணி நேரத்தில், 10 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. 

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குநர் பிராஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மாஸ் காட்சிகளும், வசனங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என வெளியான அனைத்து மொழிகளிலும் கே.ஜி.எப் படம் எகிடுதகிடு ஹிட்டானது.

தற்போது இந்தப் படத்தின் இராண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் , கே.ஜி.எப் பட கதாநாயகன் யஷ் பிறந்தநாளை (ஜனவரி 8) முன்னிட்டு, கே.ஜி.எப் படத்தின் இராண்டாம் பாகத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.

டீஸர் வெளியான நேரத்திலிருந்து, யூடியூப்பில் ட்ரெண்டில் முதலிடத்தில் இருந்த இந்த டீஸரானது தற்போது 24 மணிநேரத்தில் 10 கோடி (100 மில்லியன்) பார்வையாளர்களை கடந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் யஷ் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.