சினிமா

ஆஸ்கரில் விருதுகளை அள்ளிய ‘டன்கர்க்’ !

ஆஸ்கரில் விருதுகளை அள்ளிய ‘டன்கர்க்’ !

webteam

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வண்ணமயமாக நடைப்பெற்றது. மொத்தம் உள்ள 24 பிரிவுகளில், ஒவ்வொன்றாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வந்தன. இதில் கிறிஸ்டோபர் நோலனின்‘டன்கர்க்’ படம் ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. சிறந்த ஒலி மற்றும் சிறந்து ஒலிக் கலவைக்கான விருதை ‘டன்கர்க்’ வென்றது.சிறந்த ஒலித் தொகுப்புக்கான விருதை அலெக் கிப்சன் மற்றும் ரிச்சர்டு கிங் ஆகியோர் பெற்றனர். ஒலிக் கலவைக்கான பிரிவில் ‘டன்கர்க்’ திரைப்படத்தில் பணியாற்றிய மார்க், கிரேக் லேண்டக்கர், கேரி ரிசோ ஆகியோர் வென்றனர். 

இரண்டாம் உலகப் போர் குறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ‘டன்கர்க்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தார். இரண்டாம் உலகப் போரில் ஃபிரான்ஸில் ஊடுருவிய நாஜிப் படை, நேசப்படை வீரர்களை  சுற்றிவளைத்துவிட்டனர். கடல் வழியாக மட்டுமே தப்பிக்க வேண்டிய நிலை.ராணுவ வரலாற்றில் மிகவும் அதிசயமான, ‘ஆபரேசன் டைனமோ’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வையே நோலன் ‘டன்கிர்க்’ படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 

நோலனின் படங்கள் நான் லீனியர் வகையை சேர்ந்து. நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் முன்னும் பின்னுமாக செல்லும் தன்மை கொண்டவை. இந்தப் படத்தின் திரைக்கதையையும் மூன்று கோணங்களாகப் பிரித்துச் சொல்லியிருந்தார். முதல் கோணம் மோலில் காத்திருக்கும் படைவீரர்களின் பயணம்.

இரண்டாவது இங்கிலாந்திலிருந்து படைவீரர்களைக் காப்பாற்ற படகைக் கொண்டுவரும் சாமனியரின் பயணம். மூன்றாவது நாஜிக்களின் வான் தாக்குதலை முறியடிக்கும் விமானப் படைவீரர்களின் பயணம்.