” 'ஜகமே தந்திரம்' படம் வேற லெவல் மேக்கிங்கில் இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜுக்கு எப்போதுமே தமிழ் உணர்வு அதிகம்” என்று அப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.
உலகம் முழுக்க இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இலங்கைத் த்தமிழர்களையும் கேங்ஸ்டர்களாக காட்டியுள்ளார் என்று விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், படம் பார்த்த இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ” 'ஜகமே தந்திரம்' இப்போதுதான் பார்த்தேன். என்னுடைய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நல்ல கருத்துகளோடும் வேற லெவல் மேக்கிங்கோடும் படத்தை இயக்கி இருக்கிறார். அவருக்கு எப்போதுமே தமிழ் உணர்வு அதிகம்.
சுருளி கதாபாத்திரத்திலேயே வாழ்ந்திருக்கிறார் தனுஷ். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் மற்ற படக்குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்” என்று பாராட்டியிருக்கிறார்.
ஏற்கெனவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய இணைப்பு: 'ஜகமே தந்திரம்' விமர்சனம்: முழு திருப்தி தராத 'பிரமாண்ட' முயற்சி!