இந்தியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை அளித்திருக்கிறது.
பரந்து விரிந்த அளவிலும், அனைவருக்கு சமவாய்ப்பு கிடைக்கும் நிலையிலும் வங்கிக் கடன் மற்றும் நிதிச் சேவைகள் இருப்பதால் இஸ்லாமிய வங்கி தொடங்கும் திட்டத்தை இப்போதைக்கு பரிசீலிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கி அல்லது ஷரியா வங்கி என்பது இஸ்லாமிய மத வழக்கப்படி வட்டியில்லாத கடன் வழங்கும் நிதிச் சேவையாகும்.